இந்தியா

ஆந்திரத்தில் 40 குரங்குகள் பலி; விஷம் வைத்துக் கொல்லப்பட்டனவா என விசாரணை

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள சிலிகம் கிராமத்தில் குட்டிக் குரங்குகள் உள்பட 40க்கும் மேற்பட்ட குரங்குகள் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ANI


ஸ்ரீகாகுளம்: ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள சிலிகம் கிராமத்தில் குட்டிக் குரங்குகள் உள்பட 40க்கும் மேற்பட்ட குரங்குகள் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சாலையோரமாக ஏராளமான குரங்குகள் மயங்கிக் கிடந்ததைப் பார்த்த கிராம மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அவர்களும் கால்நடை மருத்துவர்களும் விரைந்து வந்தனர்.

குரங்குகளை பரிசோதித்ததில் 40க்கும் மேற்பட்ட குரங்குகள் பலியாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை அனைத்தும் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா என்று விசாரணை நடைபெற்று வருகிறது. குரங்குகளின் உடல் உறுப்புகள் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து காசிபுக்கா வனத்துறை அதிகாரி கூறுகையில், சுமார் 40 முதல் 45 குரங்குகள் பலியாகியுள்ளன. உடல் கூறாய்வுக்குப் பிறகே மரணத்துக்கான உண்மைக் காரணம் தெரியவரும். அதற்கு 5 நாள்கள் வரை ஆகலாம் என்று தெரிவித்துள்ளார்.

சில குரங்குகள் மயங்கிய நிலையில் கிடந்தன. அவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த குரங்குகளை எங்கிருந்து யார் கொண்டு வந்தது. அவற்றுக்கு என்ன கொடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தின் பின்னணியில் என்ன இருக்கிறது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று  கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT