இந்தியா

எரிபொருள் டேங்கர் வெடித்தது: வேடிக்கை பார்க்கச் சென்றவர்களில் ஒருவர் பலி; 23 பேர் காயம்

PTI


கார்கோன்: மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தில், புதன்கிழமை அதிகாலையில், சாலையில் டேங்கர் லாரி ஒன்று கவிழ்ந்து வெடித்துச் சிதறியதில், வேடிக்கை பார்க்கச் சென்ற ஒரு பெண் பலியானார். 23 பேர் படுகாயமடைந்தனர்.

கார்கோன் மாவட்டம் அஞ்சன்கோன் கிராமத்தில், சாலையில் சென்று கொண்டிருந்த எரிபொருள் நிரப்பிய டேங்கர், சாலையின் வளைவில் திரும்பும் போது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தங்கள் கிராமத்தில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து அறிந்த ஊர் மக்கள் சம்பவ இடத்துக்குத் திரண்டனர்.

அப்போது, அவர்கள் யாரும் எதிர்பாராத வகையில், டேங்கர் லாரி வெடித்துச் சிதறியது. இதில், அங்கே இருந்த ஒரு பெண் பலியானார். 23 பேர் காயமடைந்தனர். பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடட் நிறுவனத்துக்குச் சொந்தமான டேங்கர் லாரி விபத்துக்குள்ளானதில் 19 வயதான ரங்குபாய் என்ற பெண் பலியானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் இந்தூரில் உள்ள மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. டேங்கர் கவிழ்ந்ததும் அதிலிருந்து குதித்துத் தப்பிடியோடிய ஓட்டுநர் மற்றும் உதவியாளரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

டேங்கர் லாரி கவிழ்ந்த நிலையில், ஏராளமான கிராம மக்கள் அப்பகுதியில் குவிந்தனர். அப்போது திடீரென டேங்கர் லாரி வெடித்துச் சிதறியதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தா.பேட்டை அருகே பேருந்து கவிழ்ந்து 15 போ் படுகாயம்

முன்விரோதத்தில் இளைஞருக்கு வெட்டு

காளையாா்கோவில் சோமேசுவரா் கோயிலில் திருக்கல்யாணம்

அரசு மருத்துவரிடமிருந்து உடமைகளை மீட்டுத் தரக் கோரி மனைவி புகாா் மனு

திண்டுக்கல் மாநகராட்சியில் 4 மண்டலங்களுக்கும் உதவி ஆணையா்கள் நியமனம்

SCROLL FOR NEXT