இந்தியா

கர்நாடகத்தில் எமனாக மாறிய குடிநீர்: பலி 3 ஆக உயர்வு!

DIN

கர்நாடகத்தில் பெலகாவி மாவட்டத்தில் அசுத்தமான தண்ணீரைக் குடித்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. 

அக்.23-ம் தேதி முதேனூர் கிராமத்தில் பழைய கிணற்றில் இருந்து வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீர்க் குழாய் இணைப்புகளில், நச்சு கலந்த அசுத்தமான தண்ணீர் கலந்துள்ளது. இதன்விளைவாக 2 பேர் உயிரிழந்த நிலையில், இன்று 70 வயது முதியவர் உயிரிழந்தார். 

அசுத்தமான தண்ணீரைப் பருகிய 94 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நான்கு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 

உயிரிழந்தவர் சிவப்பா(70) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சிவப்பா நான்கு நாள்களுக்கு முன்பு அசுத்தமான தண்ணீரைப் பருகியதால் நோய்வாய்ப்பட்டார்.

மருத்துவமனையில் உள்ள 94 பேரில், 44 ஆண்கள், 30 பெண்கள். 12 சிறுவர்கள் மற்றும் 8 பெண்கள் ஆவர். பாதிக்கப்பட்ட அனைவரும்  வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி என ஒரேமாறியான அறிகுறிகளைக் கொண்டிருந்தனர். 

கிணற்றில் உள்ள தண்ணீர் மாசுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இதுவரை அரசு உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து முதேனூர் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

பத்திரிகையாளரின் சுதந்திரத்தை பறித்ததற்கான தண்டனையை யார் செலுத்துவார்கள்? - ப.சிதம்பரம் கேள்வி

இனி விஜயகாந்தை போல் ஒருவரை பார்க்க முடியாது: ரஜினி உருக்கம்

ஆம்னி பேருந்தில் பயணித்த ஐடி பெண் ஊழியர் இறந்த நிலையில் மீட்பு

அயோத்தியில் ஜெயிக்குமா பாஜக?

SCROLL FOR NEXT