இந்தியா

மாநகராட்சி தேர்தலில் வென்றால் 5 ஆண்டுகளில் தில்லி தூய்மையாகிவிடும்: கேஜரிவால்

மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால், ஐந்தாண்டுகளில் தில்லியை தூய்மைப்படுத்துவோம் என்று கேஜரிவால் வாக்குறுதி அளித்தார். 

DIN

தில்லியில் இந்தாண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால், ஐந்தாண்டுகளில் தில்லியை தூய்மைப்படுத்துவோம் என்று கேஜரிவால் வாக்குறுதி அளித்தார். 

கேஜரிவாலின் வருகையை முன்னிட்டு, காஜிபூர் குப்பைக் கிடங்கு மற்றும் அப்பகுதிக்குச் செல்லும் சாலைகளில் ஏராளமான பாஜக ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவருக்கு எதிராக கருப்புக் கொடிகளை காட்டி முழக்கங்களை எழுப்பினர். 

இதைத்தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியினரும் பாஜகவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இரு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததால் காஜிபூர் அருகே தில்லி-உத்தரப் பிரதேச எல்லைக்குச் செல்லும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குப்பைக் கிடங்கு தளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேஜரிவால், 

தில்லி மாநகராட்சியில் கடந்த 15 ஆண்டுக் கால பாஜக ஆட்சியில் மூன்று குப்பை மலைகளை உருவாக்கி நகரம் முழுவதும் கழிவுகளால் நிரப்பியுள்ளது. 

காஜிபூர் குப்பை மேடு என்பது பாஜகவின் மோசமான செயல்கள் மற்றும் ஊழல்களின் மலை. இதற்கு வரவிருக்கும் மாநகராட்சி தேர்தலில் மக்களாகிய நீங்கள் பதில் சொல்லுங்கள். 

இந்த குப்பை மலையைப் பாதுகாக்க பாஜவினர் காவல்துறையை நியமித்துள்ளனர். அனைத்து தீய சக்திகளும் நமக்கு எதிராக சதி செய்துள்ளது. 

நடைபெறவிருக்கும் மாநகராட்சி தேர்தலில் பாஜக ஆதரவாளர்கள் கூட அவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். 

கடந்த 15 ஆண்டுகளில் தில்லியில் உள்ள குப்பை மேடுகளை அகற்றுவதில் பாஜக தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், வரவிருக்கும் எம்சிடி தேர்தலில் ஆம் ஆத்மி மீது நம்பிக்கை வைக்குமாறு பொதுமக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேர்தல் ஆணையத்திற்கு ப.சிதம்பரம் 7 கேள்விகள்: அவை...!

அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை! புதிய உச்சத்தில் வெள்ளி!!

வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? - வானிலை ஆய்வு மையம் தகவல்

மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவு

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.3 ஆகப் பதிவு

SCROLL FOR NEXT