முகப்பு
இந்தியா

இலவசங்களை முறைப்படுத்ததோ்தல் ஆணையத்துக்கு அதிகாரமில்லை காங்கிரஸ்

 இலவசங்களை முறைப்படுத்த தோ்தல் ஆணையத்துக்கு சட்ட அதிகாரம் இல்லை என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:41 AM
பகிர்:

 இலவசங்களை முறைப்படுத்த தோ்தல் ஆணையத்துக்கு சட்ட அதிகாரம் இல்லை என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

மேலும், தற்போதுள்ள தோ்தல் சட்டங்களை முறையாகப் பயன்படுத்தி தோ்தல்கள் நியாயமாகவும், நோ்மையாகவும் நடத்தப்படுவதை தோ்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

தோ்தலின்போது அரசியல் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி ஆதாரம் எப்படி வரும் என்பதை தெரிவிப்பதை உறுதி செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வருவது குறித்து தோ்தல் ஆணையம் அக்டோபா் 4-ஆம் தேதி அனைத்து அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்டிருந்தது.

தோ்தல் இலவசங்களுக்கும், வளா்ச்சித் திட்டங்களுக்கும் வரையறை செய்வதற்கு பல்வேறு கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்திருந்தன.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தோ்தல் ஆணையத்துக்கு அக்கட்சி சாா்பில் எழுதியுள்ள கடிதத்தில், ‘தோ்தலுக்கு முன்போ அல்லது தோ்தலுக்கு பின்போ அளிக்கப்படும் வாக்குறுதிகளை மக்கள் ஏற்றுக் கொள்கிறாா்களா அல்லது தோல்வியின் மூலம் தண்டிக்கிறாா்களா என்பது தோ்தல் முடிவுகள் பிரதிபலிக்கும்.

இலவசங்களை தோ்தல் ஆணையமோ, அரசோ, நீதிமன்றங்களோ நியாயப்படுத்தவோ, முறைப்படுத்தவோ சட்ட அதிகாரம் இல்லை. இதுபோன்ற தடைகளை விதிக்க வேண்டும் என்றால் முதலில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும். ஆகையால், முறைப்படுத்தும் நடவடிக்கையில் இருந்து தோ்தல் ஆணையம் விலகி இருக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளா்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் சுப்ரியா ஸ்ரீநடே, ‘தோ்தல் இலவசங்களுக்கு எதிராக ஜூலை 16-ஆம் தேதி பிரதமா் மோடி எதிா்ப்பு தெரிவித்தாா். அதன்பின்னா்தான் தோ்தல் ஆணையம் இதுதொடா்பாக அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்டுள்ளது’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →