தெலங்கானாவில் 2-வது நாளாக ராகுல் நடைப்பயணம்!
தெலங்கானாவில் இரண்டாவது நாளாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நடைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
தெலங்கானாவில் இரண்டாவது நாளாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நடைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ‘பாரத் ஜோடோ’ நடைப் பயணத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி முன்னெடுத்துள்ளார்.
தமிழகத்தில் தொடங்கிய நடைபயணமானது கேரளம், கர்நாடகம், ஆந்திரத்தைக் கடந்து நேற்று தெலங்கானா மாநிலத்தை அடைந்தது. தொடர்ந்து தெலங்கானாவில் நாராயண்பேட்டை பகுதியில் 2-வது நாளாக இன்று அவர் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். மகபூப் நகர் வரை பயணிக்கிறார். அங்கு தனியார் கல்லூரியிலும் பேசவுள்ளார்.
ராகுல் காந்தி 16 நாள்கள் தெலங்கானாவில் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இதனிடையே நவம்பர் 4 ஆம் தேதி ஒருநாள் ஓய்வெடுக்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிக்க | எலான் மஸ்க் வசமானது ட்விட்டர்: முக்கிய அதிகாரிகள் அதிரடியாக நீக்கம்!