கார், கிரேன் எல்லாம் வைத்து சினிமாவை விஞ்சும் ஃபோட்டோ ஷூட் நடத்திய மணமக்கள் 
இந்தியா

கார், கிரேன் எல்லாம் வைத்து சினிமாவை விஞ்சும் ஃபோட்டோ ஷூட் நடத்திய மணமக்கள்

கார், கிரேன் எல்லாம் வைத்து சினிமாவை விஞ்சும் வகையில் ப்ரீ-ஃபோட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார்கள் மணமக்கள். 

DIN


திருமணத்துக்கு முன்பு ஒன்றாக நிற்க வைத்து புகைப்படம் கூட எடுக்க மாட்டோம் என்று கூறி வந்த தலைமுறை மாறி, தற்போது கார், கிரேன் எல்லாம் வைத்து சினிமாவை விஞ்சும் வகையில் ப்ரீ-ஃபோட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார்கள் மணமக்கள்.

திருமணத்தின் போது புகைப்படம் எடுப்பதும், பிறகு திருமணத்துக்குப் பிறகு வீட்டில் இருப்பதுபோல ஒரு புகைப்பட ஆல்பம் போடுவதும், அதையும் தாண்டி, திருமணத்துக்கு முன்பே ப்ரீ ஃபோட்டோ ஷூட் நடத்துவது என்று புகைப்பட ஆல்பங்களின் வளர்ச்சி அபாரமாக உள்ளது.

அதுவும் ஏதோ பூங்கா, கடற்கரை என ரம்மியமான இடங்களில் புகைப்படங்கள் எடுத்து வந்தார்கள் மணமக்கள். இதையெல்லாம் தாண்டி தற்போது ஒரு விடியோ வெளியாகியிருக்கிறது.

அதில், ஒரு காரை மணமக்கள் பைக்கில் தாண்டுவது போல, கிரேன் வைத்து பைக்கைத் தூக்கி விடியோ மற்றும் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இதையெல்லாம் பார்க்கும் போது சினிமா காட்சிகளையே விஞ்சும் வகையில் புகைப்படம் எடுத்திருப்பதாக மக்கள் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த விடியோக்களை பார்க்கும் இளசுகள் பலரும் லைக்குகளை அளித்து வருகிறார்கள். தங்களது கருத்துகளையும் பகிர்ந்து வருகிறார்கள்.

நன்றி : Best of the Best டிவிட்டர் பக்கம்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேர்தல் ஆணையத்தின் இதே செயல்பாடு தொடர்ந்தால் ஜனநாயகத்துக்கு பேராபத்து! -சுதர்சன் ரெட்டி

இந்தியாவுடனான வணிகம் ஒருதலைபட்சமான பேரழிவு: டிரம்ப்

நான் மெஸ்ஸி கிடையாது..! தங்கப்பந்து விருது வென்ற ரோட்ரி பேட்டி!

வாக்குத் திருட்டு: பிரதமர் மோடி வெளியே முகம் காட்ட தயங்கும் நிலைமை விரைவில் ஏற்படும்! -ராகுல் காந்தி

2,900 இ-விட்டாரா கார்களை ஏற்றுமதி செய்த மாருதி சுசுகி!

SCROLL FOR NEXT