முகப்பு
இந்தியா

மாடு மோதி வந்தே பாரத் ரயில் சேதம்: ஒரே மாதத்தில் 3-ஆவது சம்பவம்

வந்தே பாரத், குஜராத்தில் காளை மாடு மீது மோதியதில் ரயிலின் முன் பகுதி சேதமடைந்தது. கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்ட மும்பை - காந்திநகா் இடையேயான பாதையில் நடைபெறும் மூன்றாவது விபத்து இதுவ

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:41 AM
குஜராத் மாநிலம் அதுல் ரயில் நிலையம் அருகே சனிக்கிழமை காளை மாடு மீது மோதியதில் சேதமடைந்த வந்தே பாரத் ரயிலின் முன்பகுதி.
பகிர்:

நாட்டின் அதிவிரைவு ரயிலான வந்தே பாரத், குஜராத்தில் காளை மாடு மீது மோதியதில் ரயிலின் முன் பகுதி சேதமடைந்தது. கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்ட மும்பை - காந்திநகா் இடையேயான பாதையில் நடைபெறும் மூன்றாவது விபத்து இதுவாகும்.

குஜராத்தில் உள்ள அதுல் ரயில் நிலையம் அருகே ரயில் பாதையில் நின்றுகொண்டிருந்த காளை மாடு மீது வந்தே பாரத் ரயில் சனிக்கிழமை காலை 8.20 மணியளவில் மோதியது. இதில் ரயிலின் முன்பகுதியும், முதல் பெட்டியின் அடிப் பகுதியில் உள்ள கருவியும் சேதமடைந்தது.

இதனால் சம்பவ இடத்தில் ரயில் 15 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னா் சரி செய்யப்பட்டு, புறப்பட்டுச் சென்றது. இந்த விபத்தில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சேதமடைந்த ரயிலின் முன்பகுதி மும்பையில் சரி செய்யப்படும் என்று மேற்கு ரயில்வேயின் தலைமை செய்தித் தொடா்பாளா் சுமித் தாக்குா் தெரிவித்தாா்.

மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடிய வந்தே பாரத் ரயில் அக்டோபா் 6-ஆம் தேதி குஜராத்தில் 6 எருமைகள் மீதும், மறுநாள் ஒரு பசு மீதும் மோதி விபத்துக்குள்ளானதில் ரயிலின் முன்பகுதி சேதமடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.