இந்தியா

குஜராத்தில் பொது சிவில் சட்டம் அமல்: அமைச்சரவை முடிவு

DIN

குஜராத் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை (யுசிசி) அமல்படுத்துவதற்கான குழுவை அமைப்பதாக குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி சனிக்கிழமை அறிவித்தார்.

அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், முதல்வர் பூபேந்திர படேல் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒரு வரலாற்று முடிவை எடுத்துள்ளார். மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான குழு அமைக்கப்படும் என்று குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி கூறினார். .

குஜராத் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து மதிப்பீடு செய்ய குழு ஒன்றை அமைக்க அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் இந்தக் குழு அமைக்கப்படும் எனத் தெரிகிறது.

முன்னதாக உத்தரகண்ட் மற்றும் ஹிமாசல் பிரதேச அரசுகள்  பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான முடிவை அறிவித்தன.

நாட்டில் சமத்துவத்தை கொண்டு வரும் என்று பல அரசியல் தலைவர்கள் பொது சிவில் சட்டத்தை ஆதரித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்டவாளத்தில் படுத்திருந்த போது ரயில் மோதி ஒருவர் பலி, 2 பேர் படுகாயம்!

கேஜரிவாலை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு தள்ளுபடி!

எச்சிஎல் நிறுவனம் 10,000 புதிய பணியாளர்களை நியமிக்கத் திட்டம்!

சிபிஎஸ்இ: இந்தாண்டும் மாணவிகளே அதிக தேர்ச்சி!

பாலிவுட் ராணி..!

SCROLL FOR NEXT