இந்தியா

அராஜகத்தின் அடையாளம் கேஜரிவால்: அனுராக் தாக்கூர்

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை அராஜகத்தின் அடையாளம் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் சாடியுள்ளார். 

DIN

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை அராஜகத்தின் அடையாளம் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் சாடியுள்ளார். 

ரூபாய் நோட்டுகளில் லட்சுமி மற்று விநாயகர் படங்களை இணைக்குமாறு கேஜரிவால் விடுத்த வேண்டுகோள் தொடர்பான கேள்விக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பதிலளித்தார். 

ராமர் கோயில் கட்டுவதை எதிர்க்கும் அரவிந்த் கேஜரிவால் அராஜகத்தின் அடையாளம். அவர் பொய்யாகப் பேசுகிறார். 

அவர் தனது போலித்தனத்திலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப புதிய பிரசாரங்களை செய்கிறார்.

பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸின் குற்றப் பத்திரிகை குறித்து, தேசியத் தலைமை ஜாமீனில் உள்ளவர்களுக்கு மற்றவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை வெளியிடத் தார்மீக உரிமை இல்லை என்று அவர் கூறினார். 

மேலும், "இரட்டை என்ஜின் அரசு" ஹிமாசலப் பிரதேசத்தின் அனைத்துத் துறை வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும், வளர்ச்சியின் வேகத்தை முன்னெடுத்துச் செல்ல பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வருவது அவசியம் என்றும் அவர் கூறினார்.

இரட்டை என்ஜின் அரசாங்கத்தின் சக்தி ஒவ்வொரு துறையிலும் தெரியும் என்று மத்திய அமைச்சர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடிமனை பட்டா கோரி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம்

ஆரணியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

தமிழ்ச் செம்மல் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வாயு உற்பத்தி ஆலை அமைப்பதைக் கண்டித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

வேடசந்தூா் பகுதியில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT