தில்லியில் காற்றின் தரம் 'மிகவும் மோசம்'!
தீபாவளிக்குப் பிறகு தில்லியில் காற்றின் தரம் 'மிகவும் மோசம்' பிரிவுக்கு மாறியுள்ளது.
தீபாவளிக்குப் பிறகு தில்லியில் காற்றின் தரம் 'மிகவும் மோசம்' பிரிவுக்கு மாறியுள்ளது.
தலைநகர் தில்லியில் காற்று மாசு காரணமாக தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. மீறி வெடித்தால் அபராதமும் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் தடையை மீறி சிலர் பட்டாசு வெடித்ததால் அங்கு காற்றின் தரம் மிகவும் மோசமாக மாறியுள்ளது.
தில்லியில் காற்றின் தரம் 'மோசம்' பிரிவில் இருந்து 'மிக மோசம்' பிரிவுக்கு மாறியுள்ளது.
இன்று சனிக்கிழமை காலை தில்லியில் சராசரி காற்றின் தரக் குறியீடு 309 ஆக உள்ளது. தில்லி பல்கலை. பகுதியில் 355 ஆகவும் மதுரா சாலையில் 340 ஆகவும் உள்ளது.
அதுபோல நொய்டாவில் காற்றின் தரம் 392 புள்ளிகளாக உள்ளது.
இதனையடுத்து, காற்று மாசு அதிகரிப்பதைத் தடுக்க அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதையும் படிக்க | ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!