இந்தியா

மத்திய தென் கொரியாவில் லேசான நிலநடுக்கம்!

DIN

தென்கொரிய நாட்டின் மத்திய பிராந்தியத்தில் உள்ள விவசாய பகுதியில் 4.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

தென் கொரியாவின் வானிலை நிறுவனம் கூறுகையில், 

இந்தாண்டு நாட்டில் ஏற்பட்ட 38 நிலநடுக்கங்களில், கோசன்நகரில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் வலிமையானது. 

இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவானது.  நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். 

பாதுகாப்பு அமைச்சகத்தின் பேரிடர் தலைமையகத்தின் அதிகாரியான லீ ஜே-யோங் கூறுகையில், 

மத்திய வடக்கு சுங்சியோங் மாகாணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து நிலநடுக்கம் ஏற்பட்டதாக, குடியிருப்பாளர்களிடமிருந்து 50க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்ததாகக் கூறினார்.

மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு அமைப்புகளின் பாதுகாப்பை மறுபரிசீலனை செய்யும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT