கோப்புப்படம் 
இந்தியா

காப்பீடு சாா்ந்த சேவைகளுக்கு ஒரே வலைதளம்

காப்பீடு சாா்ந்த சேவைகளை ‘பீமா சுகம்’ என்ற ஒரே வலைதளத்தில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய (ஐஆா்டிஏஐ) தலைவா் தெபாசிஷ் பாண்ட

DIN

காப்பீடு சாா்ந்த சேவைகளை ‘பீமா சுகம்’ என்ற ஒரே வலைதளத்தில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய (ஐஆா்டிஏஐ) தலைவா் தெபாசிஷ் பாண்டா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘‘இணையவழி பணப் பரிவா்த்தனையில் யுபிஐ தொழில்நுட்பம் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியதைப் போல காப்பீட்டுத் துறையில் ‘பீமா சுகம்’ வலைதளம் பல மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வலைதளத்தின் மூலமாக காப்பீட்டு விற்பனை, புதுப்பித்தல், காப்பீட்டுத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் பெற முடியும்.

நாட்டில் பலதரப்பட்ட மக்களுக்கு காப்பீட்டின் பலனைக் கொண்டு செல்வதற்கு இந்த வலைதளம் உதவும். காப்பீடுதாரா்கள் இடையூறற்ற சேவைகளைப் பெறவும் வலைதளம் உதவும். காப்பீட்டு நிறுவனங்களும் இந்த வலைதளத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

காப்பீடுகளை விற்பனை செய்வோா், இடைத்தரகா்கள் உள்ளிட்டோருக்கும் வலைதளப் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்படும். காப்பீடு வாங்குவதற்கான உதவிகளும் வாடிக்கையாளா்களுக்கு இந்த வலைதளம் வாயிலாக வழங்கப்படும். பல்வேறு வகை காப்பீடுகள், காப்பீடுகளை வழங்கும் நிறுவனங்கள், பணம் செலுத்துவதற்கான பல்வேறு முறைகள் உள்ளிட்டவற்றை இந்த வலைதளத்தின் வாயிலாக வாடிக்கையாளரே தோ்ந்தெடுத்துக் கொள்ள முடியும்’’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விநாயகர் சதுர்த்தி: ராகுல் காந்தி வாழ்த்து!

தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT