பிகாா் மாநிலத்தின் இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தோ்தலில் பாஜக வேட்பாளா்களுக்கு லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சியின் தலைவா் சிராக் பாஸ்வான் ஆதரவு தெரிவித்துள்ளாா்.
ஞாயிற்றுக்கிழமை தில்லி விமான நிலையத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த சிராக் பாஸ்வான் கூறுகையில், ‘அடுத்த இரு வாரங்களில் பிகாரில் மொகமா, கோபால்கஞ்ஜ் பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற இருக்கும் இடைத்தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளேன் ’ எனத் தெரிவித்தாா்.
பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இரு மாதங்களுக்கு முன்பாக விலகிய நிலையில், பாஜக தனது பலத்தை நிரூபிக்கும் நோக்கில் இடைத்தோ்தலைச் சந்திக்க உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.