முகப்பு
தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் எக்ஸ்பிபி வைரஸ் பாதிப்பு உறுதி
இந்தியா

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் எக்ஸ்பிபி வைரஸ் பாதிப்பு உறுதி: நவம்பரில் தீவிரமடையுமா?

இந்தியாவில் தமிழகம், கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்பட 8 மாநிலங்களில், உருமாறிய கரோனா வைரஸ் எக்ஸ்பிபி வகை பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் எக்ஸ்பிபி வைரஸ் பாதிப்பு உறுதி: நவம்பரில் தீவிரமடையுமா?

இந்தியாவில் தமிழகம், கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்பட 8 மாநிலங்களில், உருமாறிய கரோனா வைரஸ் எக்ஸ்பிபி வகை பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:42 AM
தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் எக்ஸ்பிபி வைரஸ் பாதிப்பு உறுதி
பகிர்:

புனே: இந்தியாவில் தமிழகம், கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்பட 8 மாநிலங்களில், உருமாறிய கரோனா வைரஸ் எக்ஸ்பிபி வகை பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் 52 பேருக்கும், ஒடிசாவில் (35), மேற்கு வங்கம் (17), மகாராஷ்டிரம் (17), தில்லி (6), கர்நாடகம் (6), குஜராத் (2), ராஜஸ்தான் (1) ஆகிய மாநிலங்களில் எக்ஸ்பிபி வகை வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போதுவரை பிஏ.2.75 வகை உருமாறிய கரோனா வைரஸ்தான் வேகமாகப் பரவி வருகிறது. ஆனால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்த வகை வைரஸ் பாதிப்பு 88 சதவீதத்திலிருந்து 70 சதவீதமாக அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது கரோனா உறுதி செய்யப்படும் மொத்த நபர்களில் 20 சதவீதம் பேர் எக்ஸ்பிபி வகை வைரஸால் பாதிக்கப்படுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எக்ஸ்பிபி அதிகமாக பரவி வருவதால் ஏற்கனவே பரவி வந்த பிஏ.2.75 வகை வைரஸின் பாதிப்பு மெல்லக் குறைந்து வருகிறது. தற்போது மேற்கு வங்கம் மற்றும் தில்லியில் பரவி வரும் கரோனா வைரஸில் பெரும்பாலும் எக்ஸ்பிபி ஆகவே உள்ளது என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே, கனடா மற்றும் பிரிட்டனிலும் எக்ஸ்பிபி வகை வைரஸ் பரவி வருகிறது.  இந்த எக்ஸ்பிபி வைரஸிலும் பல வகையான மாறுபாடுகள் காணப்படுவதாகவும், இதில் ஒன்று, இரண்டு, மூன்று வகைகள் தற்போது சிங்கப்பூர், வங்கதேசம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, டென்மார்க் நாடுகளில் பரவியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், சிங்கப்பூர் அரசு, வரும் நவம்பரில் எக்ஸ்பிபி வைரஸ் பரவுவது அதிகரிக்கலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →