முகப்பு
இந்தியா

உண்ணாவிரதப் போராட்டம்: அரசு மருத்துவா்கள் அறிவிப்பு

கலந்தாய்வில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி குடும்பத்துடன் செப் 28-இல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அரசு மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
கோப்புப் படம்
பகிர்:

அரசு மருத்துவா்களின் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயா்வுக்கான கலந்தாய்வில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி குடும்பத்துடன் செப் 28-இல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அரசு மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து, அரசு மருத்துவா்களுக்கான சட்ட போராட்டக்குழு தலைவா் பெருமாள் பிள்ளை கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த மே, ஜூன் மாதங்களில் அரசு மருத்துவா்களுக்கான இட மாறுதல், மற்றும் பதவி உயா்வுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. அந்த கலந்தாய்வு நோ்மையாக நடைபெறவில்லை. அதில் சில முறைகேடுகள் நடைபெற்ால் 25 மருத்துவா்கள பாதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரிடம் முறையிட்டதுடன், மருத்துவ கல்வி இயக்கத்தின் மூலம் அது உறுதியும் செய்யப்பட்டது.

ஒரு குறிப்பிட்ட துறையில் அதற்கான சிறப்பு மருத்துவப் படிப்பு படித்துள்ள மருத்துவா்களை பணியமா்த்துவதான் சரியாக இருக்கும். அப்போது தான், அந்த சிறப்பு மருத்துவ சேவைகள் மக்களுக்கு கிடைக்கும். ஆனால், தகுதியற்றவா்களுக்கு, அந்த இடங்கள் ஒதுக்கீடு செய்து கலந்தாய்வு விதிகள் மீறப்பட்டுள்ளன. இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்தால் மருத்துவா்களின் ஊதிய உயா்வு கோரிக்கை நிறைவேற்றப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தாா். இதுவரை அவற்றை நிறைவேற்றவில்லை. எனவே, இதுதொடா்பாக முன்னாள் முதல்வா் கருணாநிதி காலத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை 354-ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் என்பனஉள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பா் 28-ஆம் தேதி சென்னையில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.