இந்தியா

நாட்டில் புதிதாக மேலும் 7,946 பேருக்கு தொற்று: 37 பேர் பலி

நாட்டில் ஒரேநாளில் 7,946 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 37 பேர் பலியாகியுள்ளனர். 

DIN

புது தில்லி: நாட்டில் ஒரேநாளில் 7,946 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 37 பேர் பலியாகியுள்ளனர். 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,946 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 62,748 ஆக உள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.14 சதவீதமாக உள்ளது. 

மேலும், 37 பேர் கரோனாவுக்கு உயிரிழந்ததையடுத்து மொத்த உயிரிழப்பு 5,27,874 ஆக உள்ளது. இறந்தோரின் விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது.

கரோனாவிலிருந்து மேலும் 10,828 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,38,45,680 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். குணமடைந்தோர் விகிதம் 98.67 சதவீதமாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரை 2,12,52,83,259 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. புதன்கிழமை ஒரேநாளில் மட்டும் 12,90,443 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எம்பிபிஎஸ்: முதல் சுற்று கலந்தாய்வு தேதி நீட்டிப்பு

அந்தியூரில் பருத்தி விவசாயிகள் சாலை மறியல்

அடிப்படைக் கல்வியால் அறிவு, ஒழுக்கம் மேம்படும்: அமைச்சா் மகேஸ் பொய்யாமொழி

லாரியில் இருந்து விழுந்து இளைஞா் உயிரிழப்பு

இறைச்சி கடைக்காரா் கொலை: இளைஞா் மீது குண்டா் சட்டம்

SCROLL FOR NEXT