கோப்புப்படம் 
இந்தியா

'முஸ்லிம்களை துன்புறுத்த நினைக்கிறார்கள்' - உ.பி. அரசு மீது ஓவைசி குற்றச்சாட்டு

உத்தரப் பிரதேச அரசு முஸ்லிம்களை துன்புறுத்த விரும்புவதாக ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி குற்றம் சாட்டியுள்ளார். 

DIN

உத்தரப் பிரதேச அரசு முஸ்லிம்களை துன்புறுத்த விரும்புவதாக ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி குற்றம் சாட்டியுள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அங்கீகரிக்கப்படாத மதரஸாக்கள் பற்றிய கணக்கெடுப்பை நடத்துமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். 

மதரஸாக்களின் எண்ணிக்கை, அதில் உள்ள ஆசிரியர்களின், மாணவர்களின் எண்ணிக்கை, அரசின் கீழ் உள்ளதா உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய கணக்கெடுப்பை வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. 

அனைத்து மாவட்ட மாஜிஸ்திரேட்டுகளுக்கும் இதுதொடர்பான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசியலமைப்பு சட்ட விதி 30ன் படியே மதரஸாக்கள் செயல்படுகின்றன. அப்படி இருக்க அதுகுறித்து உத்தரப்பிரதேச அரசு கணக்கெடுப்புக்கு உத்தரவிட்டது ஏன்?

இது கணக்கெடுப்பு அல்ல. இது சிறிய தேசிய குடிமக்கள் பதிவேடு. சில மதரஸாக்கள் மாநில மதரஸா வாரியத்தின் கீழ் உள்ளன. சட்டப்பிரிவு 30ன் கீழ் எங்களது உரிமைகளில் அரசு தலையிட முடியாது. அவர்கள் முஸ்லிம்களை துன்புறுத்த நினைக்கிறார்கள்' என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: தருமபுரி, சோலைக்கொட்டாய்

பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேற உதவி: சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்தால் 5 ஆண்டுகள் சிறை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 9 லட்சம் மோசடி: ஒருவா் கைது

பாமக மாவட்ட நிா்வாகி கைதை கண்டித்து பென்னாகரத்தில் பாமகவினா் சாலை மறியல்

அம்மனின் அவதாரங்கள்

SCROLL FOR NEXT