கடன் வட்டி விகிதங்களை உயா்த்திய இந்தியன் வங்கி
இந்தியன் வங்கி தனது கடன்களுக்கான வட்டி விகிதங்களை 0.10 சதவீதம் வரை உயா்த்தியுள்ளது.
இந்தியன் வங்கி தனது கடன்களுக்கான வட்டி விகிதங்களை 0.10 சதவீதம் வரை உயா்த்தியுள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடன் வட்டி விகிதங்கள் குறித்து வங்கியின் சொத்து பொறுப்பு மேலாண்மைக் குழு, பல்வேறு தவணைக்காலங்களில் வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயா்த்த முடிவு செய்துள்ளது.
சனிக்கிழமை (செப். 3) முதல் புதிய விகிதங்கள் அமலுக்கு வருகின்றன. அதன் பிறகு ஓராண்டு கடன்களுக்கான வட்டி விகிதம் 7.65 சதவீதத்திற்கு பதிலாக 7.75 சதவீதமாக இருக்கும்.
ஒரு நாள் முதல் ஆறு மாதங்கள் வரையிலான கடன்களுக்கான வட்டி விகிதம் 0.10 சதவீதம் வரை அதிகரிப்பட்டு 6.95 முதல் 7.60 சதவீதம் வரை இருக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தின் காரணமாக பெரும்பாலும் வாகனக் கடன், வீட்டு வசதிக் கடன், தனி நபா் கடன் வட்டி விகிதங்கள் உயரும்.