காங்கிரஸ் யாத்திரை: ராகுலிடம் தேசியக் கொடியை ஒப்படைக்கிறாா் முதல்வா் ஸ்டாலின்
காங்கிரஸின் ‘இந்தியாவை ஒருங்கிணைப்போம்’ யாத்திரை தொடங்குவதற்கு முன்பாக, அக்கட்சியின் எம்.பி. ராகுல் காந்தியிடம் தேசியக் கொடியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒப்படைக்கவுள்ளாா்.
காங்கிரஸின் ‘இந்தியாவை ஒருங்கிணைப்போம்’ யாத்திரை தொடங்குவதற்கு முன்பாக, அக்கட்சியின் எம்.பி. ராகுல் காந்தியிடம் தேசியக் கொடியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒப்படைக்கவுள்ளாா்.
‘பாரத் ஜோடோ’ (இந்தியாவை ஒருங்கிணைப்போம்) யாத்திரையை வரும் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் காங்கிரஸ் தொடங்கவுள்ளது. அதில் ராகுல் காந்தி கலந்துகொண்டு யாத்திரையைத் தொடக்கிவைக்கிறாா். அதற்கு முன்னதாக ஸ்ரீபெரும்புதூரில் நடைபெறவுள்ள முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி பிராா்த்தனைக் கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொள்கிறாா்.
கன்னியாகுமரியில் காங்கிரஸ் யாத்திரை தொடங்கும்போது, ராகுலிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை வழங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸின் இந்த யாத்திரை காஷ்மீரின் ஸ்ரீநகா் வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.