முகப்பு
இந்தியா

இந்திய கடற்படைக்கு புதிய கொடி: அறிமுகப்படுத்தினார் மோடி

இந்திய கடற்படைக்காக வடிவமைக்கப்பட்ட 'நிஷான்' என்றழைக்கப்படும் புதிய கொடியை  பிரதமர் நரேந்திர மோடி கொச்சியில் இன்று அறிமுகப்படுத்தினார்.

Updated On : 2 செப்டம்பர், 2022 at 2:41 PM
இந்திய கடற்படைக்கு புதிய கொடி: அறிமுகப்படுத்தினார் மோடி
பகிர்:


கொச்சி: இந்திய கடற்படைக்காக வடிவமைக்கப்பட்ட 'நிஷான்' என்றழைக்கப்படும் புதிய கொடியை  பிரதமர் நரேந்திர மோடி கொச்சியில் இன்று அறிமுகப்படுத்தினார்.

கொச்சியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், உள்நாட்டில் கட்டப்பட்ட முதல் விமானந்தாங்கி போர்க்கப்பலான விக்ராந்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அந்த நிகழ்ச்சியின்போது, இந்திய கடற்படைக்கு புதிய கொடியையும் அவர்அறிமுகப்படுத்தினார்.

இந்தியாவின் கடல்சார் வலிமையையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றும் வகையில் அந்தக் கொடி இருக்கும் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க.. இன்ஸ்டாமார்ட் மூலம் வாங்குவோர் அதிகரிப்பு: அதிகமாக வாங்கியது பச்சைமிளகாயா?

காலனிய ஆதிக்கத்தைக் குறிக்கும் விவரங்கள் எதுவும் புதிய கொடியில் இடம்பெறாது எனவும், இனி இந்திய கடற்படை வசம் உள்ள அனைத்துக் கப்பல்களிலும் இந்த புதிய கொடியே இடம்பெறும் எனவும் அதிகாரிகள் கூறியிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.