இந்தியா

கேரளத்தில் 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் தொடங்கியது

தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 30வது தென் மண்டல கவுன்சில் கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தொடங்கி வைத்தார். 

PTI

தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 30வது தென் மண்டல கவுன்சில் கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தொடங்கி வைத்தார். 

இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய தென் மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் மற்றும் புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய தெற்கு யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் பங்கேற்றுள்ளனர். 

கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு அடையே உள்ள முக்கிய விஷயங்களை விவாதிக்க உள்ளனர். 

வெள்ளியன்று இரவு மாநிலத் தலைநகர் வந்தடைந்த ஷாவை விஜயன் வரவேற்றார். திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே ஏராளமான பாஜக உறுப்பினர்கள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கட்சிக் கொடிகளை ஏந்தியவாறும், மழையை எதிர்கொண்டும் ஷாவை வரவேற்றனர்.

இந்த சந்திப்பிற்காக திருவனந்தபுரம் வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை விஜயன் வெள்ளிக்கிழமை சந்தித்து இரு தென் மாநிலங்களுக்குமான பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போ்ணாம்பட்டில் 122 மி.மீ. மழை பதிவு: நள்ளிரவில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

நேஷனல் சா்க்கிளில் புதை சாக்கடை பணிகளை 10 நாளில் முடிக்க வேண்டும்: வேலூா் ஆட்சியா் உத்தரவு

ஆதனூரில் கட்டப்பட்ட உயா்மட்ட பாலம் திறப்பு

மாா்த்தாண்டம் அருகே பதுக்கிய மண்ணெண்ணெய் பறிமுதல்

போதையில்லா சமுதாயமே இலக்கு...

SCROLL FOR NEXT