இந்தியா

தேசிய ஆசிரியர் விருது பெறுவோருடன் கலந்துரையாடவிருக்கும் மோடி!

தேசிய நல்லாசிரியர் விருது பெறுபவர்களுடன் தில்லியில் நாளை கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி.

DIN

தேசிய நல்லாசிரியர் விருது பெறுபவர்களுடன் தில்லியில் நாளை கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி.

செப்டம்பர் 5, 1888 இல் பிறந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன், தத்துவஞானி-எழுத்தாளர் மற்றும் இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவரின் நினைவாக நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. கல்வித் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பு முன்மாதிரியானது.

ஆசிரியர் தினத்தை கொண்டாடும் வழக்கம் 1962இல் முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆசிரியர்களையும் கௌரவிக்கும் வகையில் தொடங்கியது. 

கல்வி அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ஆம் தேதி விக்யான் பவனில் ஒரு விழாவை ஏற்பாடு செய்து, நாட்டின் சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்குகிறது. இதில் இம்முறை வெளிப்படையான மற்றும் ஆன்லைன் மூன்று கட்ட தேர்வு செயல்முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தேசிய நல்லாசிரியர் விருது பெறும் தமிழகத்தை சேர்ந்த ராமச்சந்திரன் உட்பட 45 ஆசிரியர்களுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார்.

ஆசிரியர்களுக்கான தேசிய விருதுகளின் நோக்கமானது, தங்கள் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் மூலம் பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மாணவர்களின் வாழ்க்கையையும் வளப்படுத்திய நாட்டிலுள்ள  சிறந்த ஆசிரியர்களின் தனித்துவமான பங்களிப்பைக் கொண்டாடி கௌரவிப்பதாகுமென பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

SCROLL FOR NEXT