மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வரும் காரைக்கால் மீனவர்கள் . 
இந்தியா

காரைக்கால் மீனவர்கள் 15 பேர்  மீது இலங்கை  கடற்படையினர் தாக்குதல்

காரைக்கால் மீனவர்கள் 15 பேர் மீது இலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியதால், காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

DIN


காரைக்கால்: காரைக்கால் மீனவர்கள் 15 பேர் மீது இலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியதால், காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரைக்கால் மாவட்டம், காரைக்கால்மேடு ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவரும், காரைக்கால் மற்றும் வானகிரியை சேர்ந்தவர்கள் என 15 பேர் கடந்த 2-ஆம் தேதி இரவு காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு புறப்பட்டனர்.

இவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்திய கடற்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மீன் பிடித்துக்கொண்டிருந்தனராம். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இவர்களை இரும்பு குழாய்களால் தாக்கி, படகில் வைத்திருந்த உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றுள்ளனர். 

இவர்களின் தாக்குதலில் படகு உரிமையாளர் ராஜ்குமாருக்கு பலத்த காயமேற்பட்டது. மற்றவர்களுக்கு லேசான  காயமேற்பட்டது. அந்த பகுதியில் மீன்பிடித்துக்கொண்ட பிறரின் உதவியால் இவர்கள் காரைக்கால் மீன்பிடித்துறைமுகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வந்துசேர்ந்தனர்.

காயமடைந்த அனைவரும் காரைக்காலில் தனியார் மருத்துவமனையிலும், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக ராஜ்குமார் தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 4 பேர் தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதுகுறித்து சிகிச்சை பெறுவோர் கூறுகையில், இந்திய எல்லையில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர்  மீன் கேட்டனர். இப்போதுதான் வலை வீசியுள்ளதாக கூறியதைக் கேட்காமல், படகில் ஏறி, இரும்பு குழாயால் தாக்கிவிட்டு, வைத்திருந்த உணவுப் பொருள்களையும், அணிந்திருந்த மோதிரம், ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட சாதனங்கள் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றனர் எனக் கூறினர்.

மீனவர்கள் தாக்குதலுக்குள்ளானது குறித்து காரைக்கால் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதிக்கப் பிறந்தவர்கள் தனுசு ராசிக்காரர்கள்!

புதிய சீரியலில் நடிக்கும் பாக்கியலட்சுமி சுசித்ரா!

இங்கிலாந்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி; டெஸ்ட் தொடர் சமன்!

அடுத்த 4 நாள்களுக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

நண்பர்களைத் தவிர்த்து... குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை!

SCROLL FOR NEXT