முகப்பு
இந்தியா

இந்தியா - பாக். வீரர்கள் எல்லையில் துப்பாக்கிச் சண்டை

இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் இருநாட்டு வீரர்களும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:15 AM
கோப்புப்படம்
பகிர்:

இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் இருநாட்டு வீரர்களும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியான ஆர்னியாவில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியதாக ஜம்மு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும், பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர்களுக்கு காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, பாகிஸ்தான் வீரர்களின் திடீர் தாக்குதல் குறித்து எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments