முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை! 

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற என்கவுன்டரில் 2 ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Updated On : 6 செப்டம்பர், 2022 at 5:17 PM
பகிர்:

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற என்கவுன்டரில் 2 ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள போஷ்க்ரீரி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, பாதுகாப்புப் படையினர் அங்கு சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

பதிலடி கொடுத்த பாதுகாப்புப் படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை என்கவுண்டராக மாறியது. 

Advertisement

துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.  அவர்கள் இருவரும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாகிதீன் உடன் தொடர்புடையவர்கள் என்று அதிகாரி கூறினார்.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் டேனிஷ் பட் என்கிற கோகப் துரி மற்றும் பஷரத் நபி என அடையாளம் காணப்பட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.