இந்தியா

10 லட்சத்துக்கும் அதிகமான அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்க வேண்டும்: கேஜரிவால் வேண்டுகோள்

அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் உள்ள 10 லட்சத்துக்கும் அதிகமான அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்குவதற்கான திட்டத்தை வகுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியை, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளார். 

PTI

புது தில்லி: அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் உள்ள 10 லட்சத்துக்கும் அதிகமான அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்குவதற்கான திட்டத்தை வகுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியை, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளார். 

செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய கேஜரிவால்,

ஆம் ஆத்மி கட்சியின் "மேக் இந்தியா நம்பர் 1 " பிரசாரத்தைத் தனது சொந்த ஊரான ஹரியாணாவில் உள்ள ஹிசாரில் இருந்து புதன்கிழமை தொடங்கப் போவதாக அறிவித்தார். 

ஸ்ரீ யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 14,500 பள்ளிகள் மேம்படுத்தப்படும் என்றும், ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள், நூலகங்கள் மற்றும் விளையாட்டு வசதிகள் உள்ளிட்ட நவீன உள்கட்டமைப்புகளுடன் அமைக்கப்படும் என்றும் மோடி திங்களன்று அறிவித்தார். 

இது மிகவும் நல்ல விஷயம், ஆனால் 14,500 பள்ளிகளை நவீனமயமாக்குவது கடலில் ஒரு துளி தண்ணீர் போன்றது. 

நாட்டில் உள்ள 10.5 லட்சம் அரசுப் பள்ளிகளையும் நவீனமாக்க வேண்டும் என்று பிரதமரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று கேஜரிவால் கூறினார். 

14,500 பள்ளிகளை மட்டும் நவீனப்படுத்தினால், நாட்டில் உள்ள 10.5 லட்சம் பள்ளிகளை மேம்படுத்த 70-80 ஆண்டுகள் ஆகும். 

ஒவ்வொரு குழந்தைக்கும் நல்ல தரமான இலவசக் கல்வியை உறுதி செய்யாத வரையில் இந்தியா உலகின் முதல் நாடாக மாற முடியாது என்றார்.

"மேக் இந்தியா நம்பர் 1" பிரசாரத்தில் சேர விரும்புபவர்கள் 9510001000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாட்டு நலப் பணி திட்ட சிறப்பு முகாம் நிறைவு

நெமிலி பாலா பீடத்தில் நவராத்திரி இன்னிசை விழா நிறைவு

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

பெல் நிறுவனத்தில் காந்தி ஜெயந்தி விழா

அக்.5-இல் ராணிப்பேட்டை புத்தகத் திருவிழா தொடக்கம்: ஆட்சியா் அறிவிப்பு

SCROLL FOR NEXT