மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் அருகே காரில் ரூ.3.72 கோடி மதிப்புள்ள 7.1 கிலோ வெளிநாட்டு தங்கக் கட்டிகளை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உளவுத்துறைக்கு வந்த தகவலின்படி, ஆகஸ்ட் 30 அன்று இந்தூர் அருகே மும்பை-ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் 2 பயணிகளுடன் வந்த காரை மறித்து சோதனை செய்தபோது 7.1 கிலோ எடையுள்ள வெளிநாட்டு தங்கம் 8 கட்டிகள் இருப்பது தெரியவந்தது.
காரில் இருந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், இருவருக்கு தங்கக் கட்டிகளை சப்ளை செய்ததாகக் கூறப்படும் மும்பையைச் சேர்ந்த மேலும் ஒரு சிண்டிகேட் உறுப்பினரை டிஆர்ஐ கைது செய்ததாக அந்த அதிகாரி கூறினார்.
தங்கம் கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டு, இதுதொடர்பாக மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.