இந்தியா

ஓணம் பண்டிகை: கேரள ஆளுநர் வாழ்த்து

DIN

தென் மாநில மக்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள மலையாள மக்களுக்கும் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் ஓணம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். 

இதுகுறித்து ஆளுநர் மாளிகையில் கான் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

மாநில மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள பிற கேரள மக்களுக்கும் எனது மனமார்ந்த ஓணம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓணம் கொண்டாட்டம் சமத்துவம், ஒற்றுமை மற்றும் செழிப்பு நிறைந்த வாழ்க்கையின் பொக்கிஷமான பாரம்பரியத்தை நினைவுபடுத்துகிறது. 
மேலும் ஒவ்வொரு வீட்டையும் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியுடன் உயிர்ப்பிக்கிறது. 

கேரளாவின் தனித்துவமான செய்தியாக அன்பு, சமத்துவம் மற்றும் நல்லிணக்கம், இன்னிசை, அழகு மற்றும் பிரகாசத்தை உலகம் முழுவதும் பரப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும். 

கேரளத்தின் மிகப்பெரிய ஆண்டு விழாவான ஓணம், மலையாள நாள்காட்டியில் 'சிங்கம்' மாதத்தில் திருவோண நாளில் வருகிறது. மேலும் இது அனைத்து கேரள மக்களாலும் வகுப்பு, சாதி மற்றும் மத தடைகளைக் கடந்து கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு திருவோணம் செப்டம்பர் 8ஆம் தேதி வியாழக்கிழமை வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

SCROLL FOR NEXT