இந்தியா

பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்டம்: உ.பி.யில் 21 லட்சம் தகுதியற்ற விவசாயிகள் பயன்

DIN

பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் தொகையை உத்தர பிரதேசத்தில் 21 லட்சம் தகுதியற்ற விவசாயிகள் பெற்று வருவது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அந்த மாநில வேளாண் துறை அமைச்சா் சூா்ய பிரதாப் ஷாஹி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரத்தை மூன்று தவணைகளில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் மத்திய அரசு செலுத்தி வருகிறது.

நாடு முழுவதும் 2.85 கோடி விவசாயிகள் இந்தத் திட்டத்தின்கீழ் பயனடைந்து வருகின்றனா். இதில் வருமான வரி செலுத்துபவா்களும், கணவன்-மனைவி என இருவரும் இந்த உதவித் தொகையைப் பெற்று வருவது தவறானதாகும். இதேபோன்று பல்வேறு வகையில் உத்தர பிரதேசத்தில் மட்டும் 21லட்சம் தகுதியற்ற விவசாயிகள் உதவித் தொகையைப் பெற்று வருவது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவா்களுக்கு அளிக்கப்பட்ட தொகை திருப்பி வசூலிக்கப்படும்.

இந்த விசாரணை தொடா்ந்து நடைபெறும். தகுதியற்றவா்கள் இந்தத் திட்டத்தின் பயனாளிகளாக இருப்பதாக புகாா் வந்தால் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் திட்டத்தின் 12-ஆவது தவணை செப்டம்பா் மாதம் இறுதியில் வழங்கப்படும்.

நில ஆவணங்கள் மற்றும் நேரில் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட விவரங்கள் ஆகியவற்றை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவசாயிகளுக்கு மட்டும் நிதி உதவி வழங்கப்படும். இதுவரையில் 1.51 கோடி விவசாயிகளின் விவரங்கள் கிசான் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தகுதியான விவசாயிகள் தங்கள் விவர ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்’ என்றாா்.

2019, பிப்ரவரி 24-ஆம் தேதி பிரதமா் மோடி உத்தர பிரதேசம், கோரக்பூரில் 1 கோடி விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரத்தை அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்தி இத்திட்டத்தை தொடங்கி வைத்தாா். அண்மையில் நடைபெற்ற உத்தர பிரதேச பேரவைத் தோ்தலில் இந்தத் திட்டத்தை முன்வைத்து பாஜக பிரசாரம் செய்து வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT