இந்தியா

விபத்தில் இறந்த இளைஞரின் உறுப்புகள் தானம்: ராணுவ வீரருக்கு மறுவாழ்வு

ANI


புது தில்லி: சண்டிகர் மாநிலத்தில் 20 வயது இளைஞர் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதில் ராணுவ வீரர் உள்பட பலருக்கும் மறுவாழ்வு கிடைத்துள்ளது.

54 வயதாகும் ராணுவ வீரர், இதயம் செயலிழந்து, ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு இளைஞரின் இதயம், அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டு, மறுவாழ்வு பெற்றார்.

இதயத்தைத் தவிர மற்ற அனைத்து உடல் உறுப்புகளும் சண்டிகரில் உள்ள பிஜிஐஎம்இஆர் மருத்துவமனையில் பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழந்து, உறுப்பு தானத்துக்காக காத்திருந்த நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.

விபத்தில் மூளைச்சாவடைந்த இளைஞரின், தாய், பலருக்கும் மறுவாழ்வு தரும் வகையில், தனது ஒரே மகனின் உடல் உறுப்புகளை தானமளிக்க மனமுவந்து ஒப்புக் கொண்டார். இதையடுத்து உடனடியாக இளைஞரின் உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் பல்வேறு நோயாளிகளுக்கும் பொருத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT