தாணே: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 4 வயது சிறுவனின் உடல் மீட்பு!
மகாராஷ்டிரத்தின் தாணே நகரில் கல்வா என்ற இடத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு வயது சிறுவனின் உடல் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
மகாராஷ்டிரத்தின் தாணே நகரில் கல்வா என்ற இடத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு வயது சிறுவனின் உடல் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
கல்வாவின் பாஸ்கர் நகர் பகுதியிலிருந்து வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் ஆதித்யா மௌரியா என்ற சிறுவன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீயணைப்பு படையினர் மற்றும் தாணே குடிமை அமைப்பின் பேரிடர் மேலாண்மை பிரிவு குழுவினரால் காலை 9 மணிக்கு மபத்லால் நிறுவனத்திற்கு அருகிலுள்ள நுல்லாவில் சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
Advertisement
Advertisement
சடலம் கல்வா போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக உள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில், வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை ஒரு மணி நேரத்தில் 71.12 மிமீ மழைப் பதிவானது. மேலும், நகரில் மரம் விழுந்து, வீடு இடிந்து, சுவர் இடிந்து விழும் சம்பவங்கள் பதிவாகி வருவதாகவும், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவதாக புகார்கள் எழுந்துள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.