இந்தியா

பிரிட்டன் அரசி மறைவு: செப்.11இல் ஒருநாள் அரசு துக்கம் அனுசரிப்பு

DIN

உடல்நலக்குறைவால் மறைந்த பிரிட்டனின் நீண்ட கால அரசியான எலிசபெத் மறைவிற்கு நாட்டில் ஒருநாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

பிரிட்டனின் நீண்டகால அரசியாக இருந்த இரண்டாம் எலிசபெத் நேற்று இரவு உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த சில தினங்களாக மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த அவர் நேற்று காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது. அவரது மறைவிற்கு உலகின் பல்வேறு நாட்டுத் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் இந்தியாவில் எலிசபெத்தின் மறைவையொட்டி ஒருநாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி செப்டம்பர் 11ஆம் தேதி நாடு முழுவதும் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், அந்நாளில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய நாள் அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT