இந்தியா

நான்காவது தொழில் புரட்சியை நோக்கி இந்தியா முன்னேறுகிறது: பிரதமர் மோடி

DIN

புது தில்லி: நான்காவது தொழில் புரட்சியை நோக்கி இந்தியா முன்னேறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இன்று மத்திய-மாநில அறிவியல் மாநாட்டை பிரதமர் விடியோ கணொலி வாயிலாக தொடக்கி வைத்தார்.

விடியோ கணொலி மூலம் நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, "மத்திய-மாநில அறிவியல் மாநாடு சப்கா பிரயாஸ் என்ற நமது மந்திரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. இன்று, நான்காவது தொழில்துறை புரட்சியை இந்தியா வழிநடத்தும் நிலையில், இந்தியாவின் அறிவியல் மற்றும் இந்தத் துறையுடன் தொடர்புடையவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது".

21ஆம் நூற்றாண்டின் புதிய இந்தியாவின் வளர்ச்சிக்கு, அனைத்துப் பகுதிகள் மற்றும் துறைகளின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் அறிவியல் முக்கியப் பங்கு வகிக்கும் என்றார்.

நாட்டின் விஞ்ஞானிகளின் சாதனைகளை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுமாறு மக்களை பிரதமர் கேட்டுக்கொண்டார்.

"நமது விஞ்ஞானிகளின் சாதனைகளை நாம் கொண்டாட வேண்டும். விஞ்ஞானிகளையும் அவர்களின் கண்டுபிடிப்புகளையும் கொண்டாடும் போது, ​​அறிவியல் நமது கலாசாரத்தின் ஒரு பகுதியாக மாறும். நமது அரசாங்கம் அறிவியல் அடிப்படையிலான வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருகிறது" என்று பிரதமர் கூறினார்.

அறிவியல் அடிப்படையிலான வளர்ச்சி என்ற கருத்தோடு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று அவர் வலியுறுத்தினார். 2014 முதல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் முதலீடு கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.

"2014ல் இருந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முதலீடு அதிகரித்துள்ளது. அரசின் முயற்சியால், 2015ல், 81வது இடத்தில் இருந்த, உலக கண்டுபிடிப்பு குறியீடு, தற்போது 46-வது இடத்திற்கு இந்தியா முன்னேறி உள்ளது." என்று அவர் கூறினார்.

"ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய் விக்யான் மற்றும் ஜெய் அனுசந்தன்" என்ற மந்திரத்துடன் புதிய இந்தியா முன்னேறி வருகிறது என்று பிரதமர் கூறினார்.

"இந்த அமிர்த காலில் இந்தியாவை உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையமாக மாற்ற வேண்டும். மற்ற மாநிலங்களிலிருந்து சிறந்த நடைமுறைகளை மாநிலங்கள் பின்பற்ற வேண்டும். இது நாட்டில் அறிவியல் தலைமையிலான வளர்ச்சித் திட்டங்களை சரியான நேரத்தில் மற்றும் திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கான ஒரு படியாக இருக்கும்." என்று அவர் கூறினார்.

புதுமைகளை ஊக்குவிக்கும் வகையில், மாநில அரசுகள் அதிக அறிவியல் நிறுவனங்களை உருவாக்கவும், செயல்முறைகளை எளிமைப்படுத்தவும் வலியுறுத்த வேண்டும் என்றார் பிரதமர்.

"மாநிலங்களில், பல தேசிய அளவிலான அறிவியல் நிறுவனங்கள் உள்ளன, தேசிய ஆய்வகங்கள் உள்ளன. மாநிலங்கள் அவற்றின் திறன் மற்றும் அவர்களின் நிபுணத்துவத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாநிலங்களில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களிலும் புத்தக ஆய்வகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.” என்று பிரதமர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT