செல்லப் பிராணியுடன் சுற்றுலா.. கவனிக்க வேண்டியவை 
இந்தியா

நாய் கடித்த சிறுவனுக்கு 150 தையலா? உ.பி.யில் பரிதாபம்!

உத்தரப் பிரதேசத்தில் நாய் ஒன்று 10 வயது சிறுவனைக் கடித்துக் குதறியதில் 150-க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ANI

உத்தரப் பிரதேசத்தில் நாய் ஒன்று 10 வயது சிறுவனைக் கடித்துக் குதறியதில் 150-க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காஜியாபாத்தில், சஞ்சய் நகரைச் சேர்ந்த சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென அங்குச் சுற்றித் திரிந்த பிட்புல் நாய் ஒன்று 10 வயது சிறுவனைத் தாக்கத் தொடங்கியது. 

இதில் அலறியடித்துத் தப்பித்த சிறுவனை விடாமல் துரத்தித் துரத்தி அந்த கடித்துக் குதறியுள்ளது. சம்பவ இடத்திலிருந்து சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 

பின்னர், மருத்துவமனையில் இருந்து குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். சிறுவனின் முகத்தில் 175 தையல்கள் போடப்பட்டுள்ளன. 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து நாயின் உரிமையாளருக்கு எதிராக மாநகராட்சி ரூ.5,000 அபராதம் விதித்தது. 

இதேபோன்ற சம்பவம் சமீபத்தில் காஜியாபாத்தில் நிகழ்ந்தது. வீட்டின்  லிப்டில் உரிமையாளருடன் வந்த நாய், அதே லிப்டில் வந்த சிறுவனைக் கடித்துக் குதறிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கா் யோக நரசிம்மா் கோயில் தீா்த்தக்குளம் சீரமைக்கும் பணி தொடக்கம்!

சிவகிரி வட்டத்தில் யானைகளை கண்காணிக்கும் பணியில் ‘ட்ரோன்’

வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

குறைந்துவரும் குள்ளநரி உள்ளிட்ட விலங்குகளை பாதுகாக்க வனத்துறை தீவிரம்

ஆளுநரை கண்டித்து டிச.4-இல் திக ஆா்ப்பாட்டம்: கி. வீரமணி

SCROLL FOR NEXT