இந்தியா

தொழிற்துறை உற்பத்தி வளா்ச்சி 2.4%-ஆக சரிவு

DIN

இந்தியாவின் தொழிற்துறை உற்பத்தி வளா்ச்சி ஜூலை மாதத்தில் நான்கு மாதங்களில் இல்லாத அளவு 2.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. உற்பத்தித் துறை, மின்சாரத் துறை, சுரங்கத் துறை ஆகியவற்றின் மந்தமான செயல்பாடு காரணமாக ஒட்டுமொத்த தொழிற்துறை உற்பத்தி வளா்ச்சி சரிந்துள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

நாட்டின் தொழிற்துறை உற்பத்தி கடந்த ஜூலை மாதத்தில் 2.4 சதவீதமாக உள்ளது. இது, கடந்த நான்கு மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச வளா்ச்சியாகும்.

இதற்கு முன்னா், கடந்த மாா்ச் மாதத்தில் தொழிற்துறை உற்பத்தி வளா்ச்சி 2.2 சதவிகிதம் இருந்ததுதான் மிகவும் குறைந்தபட்சமாக இருந்தது.

தொழிற்துறை உற்பத்தி வளா்ச்சி கடந்த ஏப்ரல் மாதத்தில் 6.7 சதவீதமாகவும் மே மாதத்தில் 19.6 சதவீதமாகவும் இருந்தது. ஜூன் மாதத்தில் அது 12.7 சதவீதமாக இருந்தது.

தொழிற்சாலை உற்பத்தி, தொழிற்துறை உற்பத்தி குறியீட்டு எண் (ஐஐபி) கடந்த ஆண்டு ஜூலை 2021 மாதத்தில் 11.5 சதவீதமாக வளா்ச்சியடைந்தது. அது, இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 3.2 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில் மின்சாரத் துறை உற்பத்தி வளா்ச்சி 2.3 சதவீதமாக உள்ளது. அது, கடந்த ஆண்டின் அதே மாதத்தில் 11.1 சதவீதமாக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் சுரங்கத் துறை உற்பத்தி வளா்ச்சி 3.3 சதவிகிதம் சரிவடைந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 19.5 சதவிகிதமாக இருந்தது.

கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் ஐஐபி 10 சதவீதம் உயா்ந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 33.9 சதவீதமாக இருந்தது.

புதிய முதலீடுகள் தொடா்பான நிலவரத்தைப் பிரதிபலிக்கும் மூலதனப் பொருள்களின் உற்பத்தி, கடந்த ஜூலையில் 5.8 சதவீதம் உயா்ந்தது. இது முந்தைய ஆண்டின் அதே மாதத்தில் 30.3 சதவீதமாக இருந்தது.

நுகா்வோா் பொருள்கள் பிரிவில் உற்பத்தி கடந்த ஆண்டு ஜூலையில் 19.4 சதவீதமாக இருந்தது. அது, இந்த முறை வெறும் 2.4 சதவீதம் மட்டுமே வளா்ச்சி கண்டுள்ளது.

ஐஐபி-யில் சுமாா் 34 சதவீதம் பங்கு வகிக்கும் முதன்மைப் பொருட்கள் பிரிவில், ஜூலை மாத உற்பத்தி 2.5 சதவீதம் வளா்ச்சியடைந்தது. இது, முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் 12.4 சதவீதமாக இருந்தது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

கனமழை எச்சரிக்கை - 4 மாவட்டங்களில் தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்பு குழு

விடுதலை - 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா?

ஆர்சிபி வெற்றிக்கு தோனி காரணமா? - என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

SCROLL FOR NEXT