கோப்புப் படம் 
இந்தியா

காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 மீண்டும் நடைமுறைக்கு வரப்போவதில்லை: மெகபூபா முப்தி

ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 மீண்டும் நடைமுறைக்கு வருமென சில மக்கள் நம்புவதாக மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

DIN

ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 மீண்டும் நடைமுறைக்கு வருமென சில மக்கள் நம்புவதாக மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

குலாம் நபி ஆசாத் ஜம்மு- காஷ்மீர் பயணத்தின் போது, “நான் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது குறித்து மக்களை திசை திருப்ப நினைக்கவில்லை. 370 பிரிவை நீக்க பாராளுமன்றத்தில் 3இல் 2 பங்கு பெரும்பான்மை வேண்டும். எனது வாழ்நாளில் காங்கிரஸ் 350-360 இடங்களை பிடிக்கும் என நம்பிக்கையில்லை. மேலும் எனது கட்சியின் பெயரை ஜம்மு-காஷ்மீர் மக்களே தேர்வு செய்வார்கள்” என கூறியிருந்தார்.

இது குறித்து ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி கூறியதாவது:

சட்டப்பிரிவு 370 நீக்கப்படுவதால் காஷ்மீரின் பிரச்சினை தீரப்போவதில்லை. மேலும் சிக்கலைத்தான் கொண்டுவருகிறது. ஆங்கிலேயருக்கு எதிராக போராடிய நேரு, சுபாஷ், சையது கான், வல்லபாய் படேல் போல நாமும் பாஜகவை எதிர்க்க வேண்டும். பாஜகவின் அத்துமீறலுக்கு முடிவு கட்டுவோம். நாங்கள் நேர்மையான சிந்தனையுடன் இருக்கிறோம். 

அத்வானி சிறையில் இருக்கும் யாசின் மாலிக்குடன் கைக்குலுக்குவதையோ, முசாபரதாபாத் சாலை திறக்கப்படுமெனவும், பிரதமர் மோடி பாகிஸ்தான் சென்று நவாஸின் பேத்தி திருமணத்தில் கலந்து கொள்வாரென நினைப்பது போலதான் அரசியல் சட்டப்பிரிவு 370 மீண்டும் நடைமுறைக்கு வரும் என நினைப்பது. குலாம் நபி ஆசாத் தெரிவித்திருப்பது அவரது சொந்த கருத்து. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட்டில் நான்... சாக்‌ஷி மாலிக்!

ஈரானிடம் தோற்ற இந்திய அணி! இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்ததா?

தேர்தல் ஆணையத்தின் இதே செயல்பாடு தொடர்ந்தால் ஜனநாயகத்துக்கு பேராபத்து! -சுதர்சன் ரெட்டி

இந்தியாவுடனான வணிகம் ஒருதலைபட்சமான பேரழிவு: டிரம்ப்

நான் மெஸ்ஸி கிடையாது..! தங்கப்பந்து விருது வென்ற ரோட்ரி பேட்டி!

SCROLL FOR NEXT