இந்தியா

கேரள மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, 58 பேர் காயம்!

DIN

கேரள மலைப்பாதையில் இருந்து பேருந்து ஒன்று 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிந்தார், 58 பேர் காயமடைந்தனர். 

மலையடிவாரத்தில் உள்ள சீயப்பாறைக்கும் நேரியமங்கலத்துக்கும் இடையே இன்று காலை இந்த சம்பவம் நிகழ்ந்தது. எர்ணாகுளத்திற்குச் சென்ற கேரள எஸ்ஆர்டிசி பேருந்து மலைப்பகுதியில் இருந்து சுமார் 15 அடி கீழே உருண்டு விழுந்ததில் ஒரு உயிரிழந்தார் மற்றும் 58 பேர் காயமடைந்தனர். 

முதற்கட்ட விசாரணையின்படி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 58 பேர் காயமடைந்தனர். 

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பேருந்து சுமார் 14-15 அடிக்குக் கீழே மலைப்பகுதியில் விழுந்தது என்று மாவட்ட மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

மூணாறில் இருந்து வந்து கொண்டிருந்த பேருந்தின் டயர் வெடித்ததே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே பேருந்தில் 60 பேர் இருந்ததாக பேருந்து நடத்துநர் சுபாஷ் தெரிவித்தார்.

பலத்த மழை பெய்ததால், ஜன்னல் ஷட்டர்கள் கீழே இருந்ததால், என்னால் அதிகம் பார்க்க முடியவில்லை என்று சுபாஷ் தெரிவித்தார். காயமடைந்த அனைவரும் எர்ணாகுளத்தில் உள்ள களமசேரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்பகுதியில் மேலும் விசாரணை நடைபெற்று வருகின்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT