இந்தியா

பூஞ்சில் பேருந்து கவிழ்ந்து விழுந்ததில் 11 பேர் பலி: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு 

DIN

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பேருந்து ஆழமான பள்ளத்தில் விழுந்ததில்11 பேர் பலியாகினர் மற்றும் 8 பேர் காயமடைந்தனர். விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என துணைநிலை ஆளுநர் இரங்கல் மனோஜ் சின்ஹா ​​தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​மாவட்டம் சாவ்ஜியன் பகுதியில் இருந்து மண்டிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. 

இதில், 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் 8 பேர் காயமடைந்தனர்.

சம்பவம் நடந்த உடனேயே, உள்ளூர் மக்கள், தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் ராணுவத்தினர் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் அனைவரும்  சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ​​தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பூஞ்ச், சாவ்ஜியனில் நடந்த சாலை விபத்தில் 11 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியும், வேதனை அளிப்பதாக உள்ளது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் நிவாரணம் வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு உயிர்காக்கும் உயர்தர சிகிச்சை அளிக்கவும்  உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT