இந்தியா

உ.பி.யில் சாலை விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி, 35 பேர் காயம்

உத்தரப் பிரதேசத்தின் சீதாபூரில் டிராக்டர் டிராலி மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேரந்த 4 பேர் உயிரிழந்தனர். 35 பேர் காயமடைந்தனர். 

DIN

உத்தரப் பிரதேசத்தின் சீதாபூரில் டிராக்டர் டிராலி மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேரந்த 4 பேர் உயிரிழந்தனர். 35 பேர் காயமடைந்தனர். 

தேசிய நெடுஞ்சாலை 24இல் வைக்கோல் ஏற்றிச் சென்ற டிராக்டர் டிராலி மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்தனர். 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

காயமடைந்தவர்கள் சித்தௌலி சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் சீதாபூர் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

தகவல்களின்படி, டிராக்டர் மீது லாரி வேகமாக மோதியதில் டிராக்டர்-டிராலி இரண்டாக உடைந்தது. மேலும், சாலையில் உள்ளவர்கள் மீதும் மோதியது. 

இதையடுத்து, டிராக்டரில் இருந்த பயணிகள் அனைவரும் ஷாஜஹான்பூரிலிருந்து பாரபங்கியில் உள்ள தேவா ஷெரீப் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

விபத்தையடுத்து நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து போலீசார் சரிசெய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்செக்ஸ் 301.93 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

குழம்பு சுவைக்க.. மணக்க! அற்புதமான யோசனைகள்!!

மாதவிடாய் காலத்தில்கூட... தனுஷ் படக்குழு மீது குற்றம்சாட்டிய பார்வதி!

பிக் பாஸ் 9: நீ ஹீரோடா! வெளியே வந்ததும் கமருதீனிடம் பேசிய கானா வினோத்!

ஜன. 26 முதல்.. இந்திய சந்தையில் மீண்டும் ரெனால்ட் டஸ்டர்!

SCROLL FOR NEXT