'பொது சார்ஜிங் நிலையங்களில் செல்லிடப்பேசிகளை சார்ஜ் செய்ய வேண்டாம்' 
இந்தியா

'பொது சார்ஜிங் நிலையங்களில் செல்லிடப்பேசிகளை சார்ஜ் செய்ய வேண்டாம்'

சைபர்கிரைம் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மிக மிக அவசியமின்றி பொது சார்ஜிங் நிலையங்களில் செல்லிடப்பேசிகளை சார்ஜ் செய்ய வேண்டாம் என்று ஒடிசா காவல்துறை அறிவுறுத்தியிருக்கிறது.

PTI

சைபர்கிரைம் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மிக மிக அவசியமின்றி பொது சார்ஜிங் நிலையங்களில் செல்லிடப்பேசிகளை சார்ஜ் செய்ய வேண்டாம் என்று ஒடிசா காவல்துறை அறிவுறுத்தியிருக்கிறது.

மிக நவீன கருவிகள் மூலம், சார்ஜ் போடப்படும் செல்லிடப்பேசிகளிலிருந்து தகவல்களை திருடும் அபாயம் இருப்பதாகக் கூறி ஒடிசா காவல்துறை இந்த அறிவுறுத்தலை செய்திருக்கிறது.

அதாவது, மொபைல் சார்ஜிங் நிலையங்கள் மற்றும் யுஎஸ்பி பவர் நிலையங்களில் பொதுமக்கள் தங்களது செல்லிடப்பேசிகளை சார்ஜ் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையங்கள் மூலம், செல்லிடப்பேசி தகவல்கள் திருடப்படவும், செல்லிடப்பேசிகளில முறைகேட்டுக்குப் பயன்படும் செயலிகள் பதிவிறக்கம் செய்யப்படுவதற்கான அபாயங்கள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசு விழாவில் 2.66 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்!

குழந்தைகளை ஒழுக்கமாக வளா்ப்பது தாயின் முக்கிய கடமை: உயா் நீதிமன்றம் கருத்து

இந்தியாவுக்கு எதிரான உலகளாவிய கூட்டணியில் காங்கிரஸ்: பாஜக கடும் தாக்கு

4.53 லட்சம் கால்நடைகளுக்கு நாளை முதல் கோமாரி நோய்த் தடுப்பூசி

தமிழ்நாட்டின் மீது வெறுப்புணா்ச்சியைப் பரப்பி வட மாநிலங்களில் வாக்கு பெற பாஜக நினைக்கிறது: முதல்வா் மு.க.ஸ்டாலின் பேச்சு!

SCROLL FOR NEXT