இந்தியா

யானைகளை ஆய்வு செய்ய வரும் அசாம் குழுவினருக்கு பாதுகாப்பு: தமிழக அரசுக்கு உத்தரவு

PTI


குவகாத்தி: அசாம் யானைகளை நேரில் பார்த்து ஆய்வு செய்ய வரும் குழுவினருக்கு அனுமதி வழங்கி, பாதுகாப்பு வழங்குமாறு தமிழக அரசுக்கு குவகாத்தி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டள்ளது.

தமிழகத்தில் உள்ள கோயில்களில் இருக்கும் அசாம் மாநிலத்திலிருந்து அழைத்துவரப்பட்ட யானைகளை நேரில் சென்று பார்த்து ஆய்வு செய்ய அசாம் அரசு சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த குவகாத்தி நீதிமன்ற நீதிபதி சுமன் ஷியாம் பிறப்பித்த உத்தரவில், தமிழகத்தில் உள்ள யானைகளை நேரில் பார்வையிட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நகல் கிடைத்த மூன்ற நாள்களில் தமிழகம் சென்று யானைகளை ஆய்வ செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும், தமிழ்நாட்டின் முதன்மைச் செயலருக்கும், காவல்துறை டிஜிபிக்கும் நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் அறிவுறுத்தலில், அசாமிலிருந்து வரும் குழுவினர், யானைகளை நேரில் சென்று பார்த்து ஆய்வு செய்ய அனுமதி வழங்கி, குழுவினருக்கு பாதுகாப்பு வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT