இந்தியா

லக்னௌவில் துயரம்... கனமழைக்கு சுவர் இடிந்து விழுந்து 3 சிறுவர்கள் உள்பட 9 பேர் பலி

DIN


லக்னௌ: லக்னௌவில் கனமழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில் 3 சிறுவர்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் இருவர் காயமடைந்தனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னௌவில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர், இரண்டு பேர் காயமடைந்தனர். வழக்கத்திற்கு மாறாக பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

சுவர் இடிந்து விழுந்ததில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அங்கு அவர்கள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை இணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பியூஷ் மோர்டியா கூறியதாவது: 

சுவர் விழுந்து உயிரிழந்தவர்கள் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தில்குஷா பகுதியில் உள்ள ராணுவ வளாகத்திற்கு வெளியே குடிசைகளில் வசித்து வந்தவர்கள். கனமழை காரணமாக ராணுவ வளாகத்தின் எல்லைச் சுவர் இடிந்து விழுந்ததில் இந்த உயரிழப்பு நிகழ்ந்துள்ளது. தகவல் அறிந்து அதிகாலை 3 மணிக்கு நிகழ்விடத்துக்கு சென்று இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒன்பது உடல்களும் வெளியே எடுக்கப்பட்டது. மேலும் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார் என்று பியூஷ் மோர்டியா கூறினார்.

நிதியுதவி: உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வுகளில் வேலூா் பின்தங்குவதற்கான காரணங்களை அறிய சமூக ஆய்வு

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்

8% அதிகரித்த நிலக்கரி இறக்குமதி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

30 கிலோ கஞ்சா கடத்தல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT