இந்தியா

பிரதமர் மோடியின் 1200 பரிசுகள் அவரது பிறந்தநாளான இன்று முதல் அக். 2 வரை ஏலம்

DIN



பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக கிடைத்த விளையாட்டு நினைவுப்பொருள்கள் அவரது பிறந்தநாளான இன்று சனிக்கிழமை (செப்.17 முதல் அக்டோர் 2) ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் ஏலத்தில் விடப்படுகின்றன. ஏலத்தில் டோக்கியோ 2020 பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மனீஷ் நர்வால் கையெழுத்திட்ட டி-சர்ட் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் கருப்பு பளிங்கு சிற்பம் (சிற்பி அருண் யோகிராஜ் பரிசளித்தது) ஆகியவை விற்பனையில் உள்ள விலை உயர்ந்த பொருள்களில் அடங்கும்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட புகழ்பெற்ற மற்றும் குறிப்பிடத்தக்க பரிசுப்பொருள்கள் ஆன்லைன் ஏலத்தின் நான்காவது முறையாக சனிக்கிழமை (செப். 17 முதல் அக். 2 வரை) ஏலம் விடப்படுகிறது.  ஏலத்தில் ஓவியங்கள், சிற்பங்கள், கையால் செய்யப்பட்ட பொருள்கள் மற்றும் நாட்டுப்புற கலைப்பொருள்கள் நினைவுச்சின்னங்களாக இடம்பெறும்.

பாரம்பரிய அங்கவஸ்திரம், சால்வைகள், தலைக்கவசங்கள் மற்றும் சடங்கு வாள்கள் ஆகியவை அடிக்கடி பரிசாக வழங்கப்படும் பொருள்களில் சில. வாரணாசியில் உள்ள காசி-விஸ்வநாதர் கோயில் மற்றும் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் மந்திர் ஆகியவற்றின் பிரதிகள் மற்றும் மாதிரிகள் மற்ற சுவாரஸ்யமான கலைப் பொருள்கள் அடங்கும். கூடுதலாக, விளையாட்டு நினைவுச்சின்னங்களின் புதிய தொகுப்பு உள்ளது.

மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த பொருள்கள் 2019 இல் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட்டது. முதல் சுற்றில் 1,805 பரிசுப்பொருள்களும், இரண்டாவது சுற்றில்  2,772 பொருள்களும் ஏலம் விடப்பட்டது. செப்டம்பர் 2021 இல், 1,348 பொருள்களும் ஏலம் விடப்பட்டது. 2022 ஆம் ஆண்டில், 1,200 பரிசுகள் மற்றும் நினைவுப் பொருள்கள் ஏலம் விடப்படவுள்ளன. நினைவுப் பொருள்கள் புது தில்லியின் தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த பொருள்களை pmmementos.gov.in இணையதளத்தின் மூலம் பார்வையிடலாம். 

ஏலத்தில், டோக்கியோ 2020 பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மனீஷ் நர்வால் கையெழுத்திட்ட டி-ஷர்ட் விற்பனையில் மிகவும் விலை உயர்ந்தது. இதன் அடிப்படை விலை ரூ.10,00,000. வெள்ளை மற்றும் நீல நிற ஜெர்சியில் இந்திய தேசியக் கொடி மற்றும் இந்தியாவின் பாராலிம்பிக் கமிட்டியின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

காமன்வெல்த் கேம்ஸ் 2022 க்கு மல்யுத்தக் குழு வழங்கிய ஆட்டோகிராப் செய்யப்பட்ட டி-ஷர்ட், தாமஸ் கோப்பை சாம்பியன்ஷிப் 2022 வெற்றியாளர்கள் கையெழுத்திட்ட பேட்மிண்டன் பேக், தாமஸ் கோப்பை சாம்பியன்ஷிப் 2022 தங்கப் பதக்கம் வென்ற கே. ஸ்ரீகாந்த் கையெழுத்திட்ட பேட்மிண்டன் ராக்கெட் மற்றும் ஒரு கருப்பு நிற மற்ற விலையுயர்ந்த பொருள்களும் அடங்கும். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பளிங்கு சிற்பம் (சிற்பி அருண் யோகிராஜ் பரிசளித்தது). இந்த அனைத்து பொருள்களுக்கும் அடிப்படை விலை ரூ.5,00,000 எனவும், இவைகள் ஏலத்தில் விற்பனை செய்யப்படுகின்றன என கிஷண் ரெட்டி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

SCROLL FOR NEXT