இந்தியா

பிரிட்டன் அரசி எலிசபெத் இறுதி சடங்கு: லண்டன் புறப்பட்டார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

DIN

மறைந்த பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று லண்டன் புறப்பட்டார்.

பிரிட்டனின் இரண்டாம் அரசியான எலிசபெத் கடந்த 9 ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அதனைத் தொடர்ந்து அவருடைய உடல் ஸ்காட்லாந்தின் பால்மரால் அரண்மனையில் இருந்து லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்கு  அஞ்சலிக்காகக் கொண்டு வரப்பட்டது.

அங்கு லண்டனில் பிரிட்டன் நாடாளுமன்றம் அடங்கிய வெஸ்ட்மின்ஸ்டா் வளாகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக 4 நாள்கள் அரசியின் உடல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், செப்டம்பர் 19ஆம் தேதி லண்டனில் நடைபெற உள்ள அரசியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள உலகம் முழுவதும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் லண்டன் பயணமாகின்றனர்.

இந்நிலையில், இந்தியா சார்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இன்று லண்டன் புறப்பட்டார்.

3 நாள் பயணமாக லண்டன் செல்லும் திரௌபதி முர்மு 19 ஆம் தேதி நடைபெற உள்ள இறுதிச் சடங்கில் பங்கேற்று அஞ்சலியை பதிவு செய்வார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT