முகப்பு
இந்தியா

பிரதமர் மோடி பிறந்தநாள்: பஞ்சாப், ஹரியாணா முதல்வர்கள் வாழ்த்து!

பிரதமர் நரேந்திர மோடிக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:21 AM
கோப்புப்படம்
பகிர்:


பிரதமர் நரேந்திர மோடிக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். 

முதல்வர்கள் தனது டிவிட்டரில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், 

நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என்று மான் தெரிவித்தார். 

தன்னலமற்ற சேவையின் வலிமையால் ஒரு தொழிலாளி முதல் பிரதமர் பதவி வரை வரலாற்றுப் பயணத்தை மேற்கொண்ட நரேந்திரமோடி ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என்று கட்டார் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கும் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவரும், பஞ்சாப் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான பர்தாப் சிங் பஜ்வா பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். 

பிரதமர் மோடியின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள், உயரதிகாரிகள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →