போதை  விழிப்புணா்வு இருசக்கர வாகன பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார் மேட்டூர் எம்.எல்.ஏ, சதாசிவம். 
இந்தியா

மேட்டூரில் சி.எஸ்.ஐ நல் மேய்ப்பர் ஆலயத்தில் பவள விழா கொண்டாடட்டம்

மேட்டூரில் சி.எஸ்.ஐ நல் மேய்ப்பர் ஆலயத்தில் பவள விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை போதை  விழிப்புணா்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

DIN

மேட்டூரில் சி.எஸ்.ஐ நல் மேய்ப்பர் ஆலயத்தில் பவள விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை போதை  விழிப்புணா்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. பேரணியை மேட்டூர் எம்.எல்.ஏ, சதாசிவம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

மேட்டூரில் சி.எஸ்.ஐ நல் மேய்ப்பர் ஆலயம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலயத்தில் 75 ஆவது ஆண்டையொட்டி பவளவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ஆலயத்தில் நுழைவாயிலில் ஆயர் டேனியல் சதீஷ் நெல்சன் ஜெபம் செய்து கொடியினை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து போதை விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. 

மேட்டூரில் சி.எஸ்.ஐ நல் மேய்ப்பர் ஆலயம்

பேரணியை மேட்டூர் எம்.எல்.ஏ, சதாசிவம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில்  கலந்து கொண்டவர்கள் போதைப்பொருள் ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், சாலை பாதுகாப்பு அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறு சென்றனர். 

பேரணியானது சிஎஸ்ஐ நல் மேய்ப்பர் ஆலயத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. 

இந்நிகழ்ச்சியில் ஆலயத்தின் செயலாளர் பாரிசிங், பொருளாளர் வின்சென்ட் ஜேசுதாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

ஷிகர் தவானுக்கு மீண்டும் நிச்சயதார்த்தம்! விரைவில் 2-வது திருமணம்!

இரவில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

முதல் நாள் விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறிய Vijay!

SCROLL FOR NEXT