முகப்பு
இந்தியா

பாலத்தில் இருந்த 4,000 நட்டு, போல்டுகள் காணவில்லை

ஹரியாணாவில் பாலத்தில் இருந்த 4,000 நட்டு, போல்டுகள் திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 20 செப்டம்பர், 2022 at 4:03 PM
பகிர்:

ஹரியாணாவில் பாலத்தில் இருந்த 4,000 நட்டு, போல்டுகள் திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியாணா மாநிலம், சகாரன்பூர் - பஞ்ச்குலா தேசிய நெடுஞ்சாலை 344-ல் யமுனா நகர் அருகே கட்டப்பட்டுள்ள பாலத்தை நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் ஆய்வு செய்துள்ளார்.

அப்போது பாலத்தில் இருந்த 4,000 நட்டு, போல்டுகள் காணாமல் போனதை கண்டு பொறியாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Advertisement

இருப்பினும், இந்த திருட்டு சம்பவம் குறித்து நெடுஞ்சாலைத் துறை சார்பில் இதுவரை எந்த புகாரும் காவல்துறையில் அளிக்கவில்லை என்று சதார் காவல்துறை அதிகாரி தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் பாலம் வலுவாக இருக்க போடப்பட்டிருக்கும் நட்டு, போல்டுகள் காணாமல் போன சம்பவம் அப்பகுதி மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.