இந்தியா

நொய்டாவில் சுவர் சரிந்து விபத்து: 4 பேர் பலி; 9 பேர் படுகாயம்

நொய்டாவில் சுவர் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பலியாகினர். மேலும், 9 பேர் காயமடைந்துள்ளனர். 

DIN

நொய்டாவில் சுவர் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பலியாகினர். மேலும், 9 பேர் காயமடைந்துள்ளனர். 

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில்  செக்டார் 21ல் உள்ள ஜல் வாயு விஹார் சொசைட்டி அருகே சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மேலும் 9 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விரைவில் விசாரணை தொடங்கப்படும் என்று நொய்டா போலீஸ் கமிஷனர் அலோக் சிங் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT