கோப்புப்படம் 
இந்தியா

மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

மெக்சிகோவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

DIN

மெக்சிகோவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

திங்களன்று மெக்சிகோவின் தென்மேற்கு கடற்கரையில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஒருவர் பலியானார்.

இந்த நிலநடுக்கத்தால் மெக்சிகோ நகரில் உள்ள சில கட்டடங்கள் குலங்கின. அச்சம் காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர்.

இந்த நிலநடுக்கத்தின் அளவு முதலில் 7.6 என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்தது. மெக்சிகோவின் தேசிய நில அதிர்வு நிறுவனம் செய்தியாளர் கூட்டத்தில் 7.7 ரிக்டர் அளவில் என்று கூறியுள்ளது.

யுஎஸ்ஜிஎஸ் படி, நிலநடுக்கம் அக்விலா நகருக்கு தென் கிழக்கே சுமார் 37 கிலோமீட்டர் தொலைவில், சுமார் 15.1 கிலோமீட்டர் (9 மைல்) ஆழத்தில் ஏற்பட்டது.

நிலநடுக்கம் ஏற்பட்ட உடனேயே முதலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது, ஆனால் பின்னர் திரும்ப பெறப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

கடல் கடந்து வந்து காதலரை கரம் பிடித்த ஜெர்மன் பெண்! தமிழ் முறைப்படி திருமணம்!!

கரூர் வழக்கு: கரூர் நீதிமன்ற நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு!

விக்ரமுக்கு ஜோடியாகும் மீனாட்சி சௌத்ரி!

SCROLL FOR NEXT